.
01. அகத்தி வேரையும், அறுகம்புல் வேரையும் இரவு முழுவதும் நீரில் ஊறவைத்து, காலையில் கசாயம் செய்து சாப்பிட்டு வந்தால் நீர்த்தாரை எரிச்சல் நீங்கும்.(482)
02. அரசம் வேர்ப் பட்டை 30 கிராம், 300 மி.லி
நீரில் போட்டு 100 மி.லி. யாகக் காய்ச்சி, பால் சர்க்கரை
சேர்த்துப் பருக நீர் எரிச்சல் தீரும்.
03. அல்லி இதழ்களை நீரிலிட்டுக் காய்ச்சி கசாயமாக்கிப் பாலுடன் கலந்து பருகி வர நாவறட்சி, தீராத தாகம்,சிறுநீர் எரிச்சல் குணமாகும்.
04. அறுகம்புல்லின்
வேரெடுத்து கணுவை நீக்கிவிட்டு 10 கிராம் எடுத்து, வெண்மிளகு 2 கிராம் சேர்த்துக் குடிநீரில் இட்டு வடித்து, அதில் 2 கிராம் வெண்ணெய் கூட்டி
உட்கொள்ள, மருந்தின் தீங்கு, இரச வேக்காடு, மூலக்கடுப்பு, நீர்க்கடுப்பு, நீரடைப்பு, வெட்டை, நீர்த்தாரை
எரிச்சல் நீங்கும்.
05. அறுகம்புல் வேரையும், அகத்திவேரையும் சம அளவு
எடுத்து நீரில் இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் அவற்றை
எடுத்துக் கசாயம் செய்து பருகினால் நீர்த்தாரை எரிச்சல்
நீங்கும்.(482)
06. அன்னாசிப் பழச் சாறு சாப்பிட்டால் நீர்த்தாரை எரிச்சல் குணமாகும். (1198)
07. ஓரிதழ்த் தாமரை இலையைத் தினந்தோறும் மென்று தின்று பால் அருந்தி வர ஒரு மண்டலத்தில் நீர் எரிச்சல் தீரும்.
08. கல்யாண
முருங்கை இலைச்சாறு நாளும் 50 மி.லி. 40 நாள்
குடித்து வர பெண் மலடு நீங்கி கரு தரிக்கும். நீர்த்தாரை எரிச்சல் குணமாகும். உடலும்
இளைக்கும்.
09. கல்யாண முருங்கை இலைச் சாறு ஒரு தேக்கரண்டி மோரில் கலந்து சாப்பிட்டால் நீர்த் தாரை அழற்சி, நீர் எரிச்சல் தீரும்.
10. காக்கரட்டான் வேரைப் பாலில் அவித்து, பாலில் அரைத்துச்
சுண்டைக்காய் அளவு காலை மாலை சாப்பிடச் சிறுநீர்ப் பாதை அழற்சி நீர் எரிச்சல் தீரும்.
11. கீழாநெல்லி, வல்லாரை சமனளவு அரைத்துச் சுண்டைக் காயளவு காலை மட்டும் தயிரில் கலந்து சாப்பிட்டால் நீர் எரிச்சல் தீரும்.
12.
கீழாநெல்லி சமூலம், நெருஞ்சில் சமூலம் இரண்டையும் எடுத்து அரைத்து தயிரில் கலந்து சாப்பிட்டால் நீர்த்தாரை எரிச்சல் குணமாகும்..(1429)
13. சாம்பல் பூசனிச் சாறு 15 மி.லி.யுடன் 10 செம்பரத்தம் பூவும் சாப்பிட்டு வர, நீர்த்
தாரை எரிச்சல், ரணம், அழற்சி, சொட்டு
மூத்திரம் அனைத்தும் தீரும்.
14. சிறுகண் பீளை இலைச் சாற்றில் 50 மி.லி வீதம் குடித்துவர பெரும்பாடு கல்லடைப்பு, நீரடைப்பு,, நீர் எரிச்சல் போகும்.
15. செம்பரத்தை இலையைக் கியாழமிட்டுக் கற்கண்டுச் சேர்த்துப் பருக நீர் எரிச்சல் தீரும்.
16. செம்பருத்தி இலை
அல்லது மொட்டுகள் ஐந்தினை எடுத்து, கசாயம் செய்து, அதனுடன்
பனங்கற்கண்டு சேர்த்துப் பருகினால் கோடை காலத்தில் ஏற்படும் சிறு நீர் எரிச்சல் குணமாகும்
17. செம்பருத்தி இலைகளை நீரிலிட்டுக் காய்ச்சி, வடிகட்டி, கற்கண்டு சேர்த்துப் பருகினால் நீர் எரிச்சல் தீரும்
18. செம்பருத்திப் பூச் சாறு பூசனிக் காய்ச் சாறு இரண்டும் சேர்த்து சாப்பிட்டு
வந்தால் நீர்த்தாரை
எரிச்சல், வயிற்றுப் புண், சீதபேதி ஆகியவை தீரும். (1498)
19. திருநீற்றுப் பச்சிலை விதைகளைக் கொதி நீரில் ஊற வைத்துச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கடுப்பு குணமாகும்.
(1367) இரத்தக் கழிச்சல் குணமாகும். (1377)
சிறு
நீர் எரிச்சல் தீரும் ; வெட்டை நோய் தணியும்.
(1388)
20. தொட்டற் சுருங்கி இலையை அரைத்து 10 கிராம் எடுத்து 5 - 6 நாள் காலை தயிரில் சாப்பிட வேண்டும். சிறுநீர் எரிச்சல் குணமாகும் [உடம்பில் சூடு பிடித்தால் சிறுநீர்த் தாரை எரியும்.]
21. நாவல் பழங்களைப் பிழிந்து வடிகட்டி மூன்று தேக்கரண்டி சாறு எடுத்து, சிறிது சர்க்கரை சேர்த்து குடித்தால் சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் தீரும். நீர்க்கட்டு தீரும். காலை மாலையாக இரண்டு நாட்கள் குடித்து வர வேண்டும்.
22. நெல்லிக்காய் சாற்றில் ஒரு சிட்டிகை ஏலத்தூள் சேர்த்து தினமும் 3 வேளை குடித்து வந்தால் சிறு நீர் எரிச்சல் நீங்கும்.
23.
நெருஞ்சில் சமூலம், கீழாநெல்லி சமூலம் இரண்டையும் எடுத்து கசாயம் செய்து சாப்பிட்டால் சிறுநீர்த் தாரை எரிச்சல் நீங்கும். (1429)
24.
பவளமல்லி இலைகள் ஊறிய நீரைக் குடித்து வந்தால் சிறுநீர்த் தாரையில் ஏற்படும் எரிச்சல் சரியாகும்.
25. பிரமிப் பூண்டு பிடுங்கி வந்து சுத்தம்
செய்து,
சாறு எடுத்து 30 மி.லி அளவுக்குக் குடித்தால் சிறுநீர் எரிச்சல் நீங்கும்.
26. பூசணிச் சாறு, செம்பருத்திப் பூச்சாறு, இரண்டையும் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் நீர்த் தாரை எரிச்சல், வயிற்றுப் புண், சீதபேதி ஆகியவை குணமாகும். (1498) சொட்டு மூத்திரம் குணமாகும். (1509)
27. மணித் தக்காளிக் கீரை, கைப்பிடி அளவு, ஒரு தேக்கரண்டி பார்லி அரிசி, நான்கு சிட்டிகை மஞ்சள் பொடி சேர்த்துக் கசாயம் வைத்துக் குடித்து வருகிறவர்களுக்கு, நீர்க் கடுப்பு, சிறு நீர் எரிச்சல் கட்டுப்படும்.
28. வல்லாரை, கீழாநெல்லி இரண்டையும்
அரைத்து ஒரு கிராம் எடுத்து காலையில் மட்டும் தயிரில் கலக்கி அருந்தி வந்தால் நீர் எரிச்சல் குணமாகும். (1622)
29. வில்வ இலைச் சூரணம் அரைத் தேக்கரண்டி நெய் அல்லது வெண்ணெயில் கலந்து காலை மாலை சாப்பிட்டால், நீர்த் தாரை எரிச்சல் தீரும்.
30. வில்வ இலைப் பொடி அரைத் தேக்கரண்டி எடுத்து வெண்ணெயில் கலந்து சப்பிட்டால் நீர்த் தாரை எரிச்சல் தீரும். (1532)
31. விளாம் பிசினை உலர்த்தி இடித்து தூள் செய்து காலை, மாலை ஒரு சிட்டிகை வெண்ணெயுடன் உண்டு வந்தால் விந்து ஒழுக்கு நிற்கும்.
(523) பெரும்பாடு தீரும். (1548)
நீர் எரிச்சல் குணமாகும். (1647) உள் உறுப்பு இரணம் தீரும்.
(1661)
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,விடை(வைகாசி )22]
{05-06-2021}
==========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக