மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

வியாழன், 5 ஆகஸ்ட், 2021

மூலம் - எருவாய் முளை (Piles - Projection at Anus)

 

01.   அந்தரத்தாமரை இலையை நீரிலிட்டுக் கொதிக்க வைத்து அந்த ஆவியை 10 நிமிடம் ஆசன வாயில் பிடித்து வர மூல மூளை அகலும்.

 

02.   கண்டங்கத்தரிப் பூவை வாதுமை நெய்யில் சேர்த்துக் காய்ச்சிப் பூச, எருவாய் (ஆசனவாய்) முளையைப் போக்கும்.

 

03.   சிறிய வெங்காயம் இரண்டு, மிளகு பத்து, துளசி இலைகள் பதினைந்து கொண்டு வந்து (சம அளவு தேவை) தனித் தனியாக சிறிது நீர் விட்டு அரைத்து எடுத்து, அனைத்தையும் ஒன்றாகக் கலக்க வேண்டும். இதில் ஒரு நெல்லிக் காய் அளவு எடுத்து வெந்நீரில் காலையில் வெறும் வயிற்றிலும், மாலையில் 5 மணி வாக்கிலும் உள்ளுக்குச் சாப்பிட வேண்டும். இவ்வாறு 48 நாட்கள் சாப்பிட்டால் மூல நோய் முற்றிலும் விலகும்.  ஆசன வாயில் மூலத்தின் முளைகள் இருந்தால், முருங்கை இலை ஒரு பிடி, பழுத்த எருக்கு இலை நான்கும் சம அளவாக எடுத்து அரைத்து ஆசன வாயைச் சுற்றிலும் பற்றுப் போட வேண்டும். இரவில் மட்டும் பற்றுப் போட வேண்டும். சில நாட்களில் மூலத்தின் முளைகள் அற்றுப் போய்விடும். (ஆதாரம் : “நாட்டு மருத்துவ மணி நாகம்மாநூல்)

 

04.   வாழைப் பிஞ்சு சிறந்த பத்திய உணவாகும். இதனைச் சமைத்து உண்ண, உள்மூலத்தில் உள்ள முளைகளின் அளவு குறையும்.

=====================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம்  B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு  தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்,  நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

 சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052, கடகம் (டி )20]

{05-08-2021}

==========================================================

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக