01. அத்திப் பிஞ்சையும் காயையும் சமைத்து உண்ணலாம். இவ்வாறு உண்டு வந்தால் வெள்ளை, வாத நோய், சூலை, உடல் வெப்பு, புண் ஆகியவை போகும்.
02. அமுக்கராக் கிழங்கைப் பாலில் வேகவைத்து, அலம்பி, உலர்த்திப் பொடி செய்து ஒரு வேளைக்கு 3 முதல் 5 கிராம் வரை தேனில் கலந்து கொடுத்தால், வாதம், கபம் இவற்றால் பிறந்த நோய்கள் நீங்கும். வீக்கம், பசியின்மை, உடல் பருமன் ஆகியவை போகும்.
03. இலச்சக்கட்டைக் கீரையை உணவுடன் சேர்த்து வந்தால் வாதம் மற்றும் வாயு சம்பந்தமான எல்லா நோய்களும்
குணமாகும்.(1202)
04. கடுக்காய்ப் பொடியை அரைத் தேக்கரண்டி எடுத்து இரவு உணவுக்குப் பின் ஒரு தம்ளர் வெது வெதுப்பான வெந்நீரில் கலந்து அருந்துங்கள். உடல் வலுவாகும்; வாதம் கட்டுப்படும்.
05. கட்டுக்கொடி வேர் சிறிதளவும், ஒரு துண்டு சுக்கும், நான்கு மிளகும் எடுத்து நீரில் இட்டுக் காய்ச்சிக் கொடுத்துவந்தால் வாத நோய், வாத வலி ஆகியவை தீரும். (1098)
06. கண்டங்கத்தரி இலைச் சாற்றை சம அளவு நல்லெண்ணையுடன் கலந்து பக்குவமாக்க் காய்ச்சிப் பூசினல் தலைவலி, வாத நோய்கள் கட்டுப்படும்.
07. கருங்காக்கரட்டான் (நீலப் பூ பூக்கும் கொடி) வேரைப் பால் ஆவியில் வேக வைத்து
உலர்த்திப் பாதியளவு சுக்குடன் பொடித்துக் காலை மாலை 2 கிராம் வெந்நீருடன்
உட்கொள்ள வாத நோய், வாதச் சீதளம் தீரும்.
08. கற்கண்டு 150 கிராம் எடுத்து பொடித்து, நீர் விட்டு, கிளறி, 15 கிராம் கடுக்காய்ப் பொடி கலந்து, காலை மாலை அரைத் தேக்கரண்டி வீதம் வெந்நீருடன் உட்கொண்டால், குடல் புண், சுவாச காசம், மூலம், வாதம் கட்டுப்படும்.
09. குப்பைமேனி இலைச் சாறு எடுத்து தினசரி ஒரு அவுன்ஸ் (30 மி.லி) சாப்பிட்டு வந்தால் வாத நோய் குணமாகும்.(1103)
10. கொன்றை வேர்ப் பட்டை 100 கிராம் ஒரு லிட்டர்
நீரில் போட்டு 200 மி.லி யாகக் காய்ச்சி காலை
மாலை குடித்து வரக் குடல் வாதம், வாத நோய்கள் தீரும்.
11. சதகுப்பை இலைகளைச் சாப்பிட்டு வந்தால் வாத நோய், பசியின்மை குறையும்.
12. சித்தாமுட்டி வேரெடுத்து நீர் விட்டுக் காய்ச்சி அதனுடன் இரண்டு சிட்டிகை திரிகடுக சூரணம் சேர்த்து காலை மாலை மூன்று நாட்கள் உட்கொண்டு வந்தால், வாதம், சுரம் ஆகியவை தீரும். (1100)
13. சீந்தில் கொடி, தழுதாழை இரண்டையும் சம
அளவு எடுத்து, அரைத்து, தினமும் காலை மாலை இரண்டு
கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி, வாத நோய் ஓடும்
14. சுக்குடன் வேப்பம் பட்டை சேர்த்து நசுக்கி, கசாயம் வைத்துச் சாப்பிட்டு வந்தால் வாதம் கட்டுப்படும்.
15. சுண்டை வேர், இலுப்பைப் பிண்ணாக்கு, தும்பை வேர் ஆகியவற்றைச் சம அளவில் எடுத்து, காய வைத்து, பொடித்து நுகர்ந்து வந்தால், இழுப்பு, வாத நோய் தணியும்.
16. தான்றிகாய்ப் பொடியில் சிறிதளவு வெல்லம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் வாதம் கட்டுப்படும்.
17. திப்பிலியைப் பொடித்து ஐந்து கிராம் எடுத்து , சிறிதளவு பாலில் கலந்து குடித்து வந்தால், உடல் வலி, முதுகு வலி, மூட்டு வலி, வாத நோய் குறையும்.
18. நன்னாரி வேரைக் கசாயம் செய்து காலை மாலை சாப்பிட்டு வந்தால் வாத நோய் கட்டுப்படும். (1421)
செரியாமை,
தோல் நோய்கள் தீரும். (1436)
19. நாய்வேளை விதைகளைத் துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் வாத நோய், பசியின்மை ஆகியவை தீரும் (1322)
20. நொச்சி, வேம்பு, தழுதாழை, குப்பைமேனி, தும்பை, ஆடாதொடை, நாயுருவி வகைக்கு
30 கிராம் போட்டு முக்கால் அளவு நீருள்ள வாயகன்ற மண் கலத்தில்
கொதிக்க வைத்துச் சுடு செங்கல் போட்டு வேது பிடிக்க வாதம்
அனைத்தும் தீரும். வாரம் ஓரிரண்டு முறை செய்யலாம்.
21. மணித் தக்காளிக் கீரையை தினந்தோறும் பருப்பு சேர்த்து சமைத்து உண்டு வரலாம். வாதம் கட்டுப்படும்.
22. மிளகாய்ப் பூண்டு
வேர் 40 கிராம் எடுத்து 250 மி.லி நீரில் போட்டு 100 மி.லி யாகக் காய்ச்சி தினம் 2 வேளைக் குடித்து வர வாத
வீக்கம்,வாத நோய், பாரிச வாதம் தீரும்.
23. மிளகய்ப் பூண்டு வேரினை எடுத்து நீர்விட்டுக் கசாயம் வைத்து இரண்டு வேளை குடித்து வந்தால் வாதநோய், வாத வீக்கம்
ஆகியவை குணமாகும். (1543)
24. முடக்கத்தான் இலை, வேர் முதலியவைகளைக் குடிநீர் செய்து அருந்தினால் வாதம், மூலம், நாட்பட்ட இருமல் ஆகியவை போகும்
25. முடக்கற்றான் கீரையை இரசம் வைத்து உண்டால் சிறுநீர் பெருக்கும், மலமிளக்கும், பசியைத் தூண்டும், வாதத்தை அடக்கும், உடலை வலிமைப்படுத்தும்.
26. முடக்கற்றான் சூப் சாப்பிட்டு வந்தால் வாத நோய் விலகி ஓடும்.. தேநீர், காப்பிக்குப் பதில் பார்லி நீர், சாப்பிட்டு வரவேண்டும். பூண்டு வேகவைத்த பால் அருந்திவரவேண்டும். பூண்டைத் தேன்கலந்து சாப்பிட்டு வரவேண்டும். இப்படிச் செய்தால் வாத நோய்கள் விலகி ஓடும்.(1109)
27. வல்லாரை இலைச் சூரணம் அரை கிராம் எடை காலை
மாலை நெய்யில் குழைத்து உண்ண வாதம் நீங்கும்.
28. வாதநாராயணன் இலைச் சாறும் ஆமணக்கு நெய்யும் ஓரளவு கூட்டிக் காய்ச்சி வடிகட்டி, 50 கிராம் உள்ளுக்குக் கொடுக்க, நன்றாக கழியும். பெருகிய வாதநோயைக் கட்டுப் படுத்தும்.
29. வாதநோய், மூலநோய் உள்ளவர்கள் பலாப்பழம் சாப்பிடலாகாது.(1106)
30. வேப்பம் பூவை ( நாட்பட்ட பழைய பூ ) நெய் விட்டு வதக்கி, உப்பு, சுட்ட பழம் புளி, வறுத்த மிளகாய், கறிவேப்பிலைக் கூட்டி, துவையல் செய்வது போலச் செய்து சோற்றுடன் கலந்துண்ண, பெருமூர்ச்சை, நாவறட்சி, சுவையின்மை, வாந்தி, நீடித்த வாத நோய், ஏப்பம், வயிற்றுப் புழு ஆகியவை போகும்.
31. வேப்ப எண்ணெயைத் தலைக்குத் தேய்த்து தலை முழுகி வந்தால், சன்னி, பிடரி இசிவு, வாத நோய்கள் தீரும்.
(1035) (1107) (1654) (1969)
மருத்துவக் குறிப்புகளுக்கு
ஆதாரம்:-
(01).அடைப்புக்
குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ். ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து
வெளியிட்டுள்ள ”
2025 எளிய சித்த மருத்துவக்
குறிப்புகள்” என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.)அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள
மருத்துவக் குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ
அதிகாரி, டாக்டர். வெ .ஹரிஷ் அன்புச்
செல்வன் M.D(s), அவர்கள் 2017
–ஆம் ஆண்டு தினமலர், பெண்கள் மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப்
பெற்றவை !
(03).அடைப்புக்
குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள
மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில்
எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப் பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு
செய்து எடுத்துக் கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052, மடங்கல் (ஆவணி )16]
{01-09-2021}
==========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக