மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

பிணி “க” கர வரிசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிணி “க” கர வரிசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 4 ஜூன், 2021

கைவிரல் - நகச்சுற்று (Whitlow)

01.   எருக்கந்தளிர் ஒரு கைப்பிடி, சிறிது மஞ்சள் இரண்டையும் அம்மியில் வைத்து அரைத்து, ஒரு பாலாடை எருக்கம் பால், அரைப் பாலாடை எள் எண்ணெய் ஆகியவற்றை அத்துடன் கலந்து, ஒரு கரண்டியில் இட்டு தீயில் காட்டி அரை வேக்காட்டில் எடுத்து பொறுக்கும் சூட்டில் விரலில் வைத்துக் கட்ட வேண்டும். மூன்று நாட்கள் கட்டைப் பிரிக்கக் கூடாது. மூன்றாம் நாள் இதே மருந்தைத்தயார் செய்து கட்ட வேண்டும். இந்தக் கட்டையும் மூன்று நாட்கள் பிரிக்க் கூடாதுஇப்படிச் செய்தால் நகச்சுற்று குணமாகும்.  (ஆதாரம்: ” நாட்டு மருத்துவமணி நாகம்மாநூல்)

02.  கிரந்தி நாயகம் இலையை அரைத்து நகச்சுற்றுக்குக் கட்டி வந்தால் விரைவில் குணமாகும்.(320)

03.  நகச்சுற்று வேதனைக்கு சிலந்தி நாயகம் இலையை அரைத்து  விரலில்  கட்டி வந்தால் இரத்தம், சீழ் வெளியேறி நகச்சுற்று குணமாகும்.(307)

04.  \நொச்சி இலை 50 கிராம், மருதாணி இலை 50 கிராம், எருக்கம் பூ இரண்டு ஆகியவை சேர்த்து அரைத்துக் கட்டினால் நகச்சுற்று ஆறிவிடும்.(316

05.  படிக்காரத்தைப் பொரித்து நீர் விட்டுக் கெட்டியாகக் குழைத்து நகச் சொத்தையின் மீது வைத்துக் கட்டினால், நகச்சுற்று விரைவில் குணமாகும்.(304)

06.  பால் ஏட்டுடன் விளக்கெண்ணெய் சேர்த்துக் குழைத்து வெண்ணெய் போல் ஆக்கி நகத்தைச் சுற்றிலும் போட்டு வர நகச்சுற்று குணமாகும்.(312)

07.  மஞ்சள், அறுகம்புல், இரண்டையும் அரைத்து சுண்ணாம்பு சிறிது கலந்து நகத்தைச் சுற்றிப் பூசிவந்தால் நகச்சுற்று குணமாகும்.(572)

08.  மருதாணி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து விரலில் வைத்துக் கட்டவேண்டும். மூன்று நாள் கட்டைப் பிரிக்கக் கூடாது. நான்காம் நாளும் இதே மருத்துவத்தை மீண்டும் செய்தால் போதும் (ஆதாரம் : “ நாட்டு மருத்துவமணி நாகம்மா “ )

==================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,விடை(வைகாசி )21]

{04-06-2021}

==================================================

குன்மம் (வயிற்று வலி) (Stomach Ache)

01.   அழிஞ்சல் இலைகளைப் பறித்து வந்து அரைத்து ஒரு கிராம் அளவுக்கு காலை மாலை உள்ளுக்குக் கொடுத்து வந்தால் குன்ம நோய் தீரும் (325)

02.   கழற்சிக் காய்ப் பொடியுடன் சிறிதளவு பெருங்காயம் சேர்த்து மோரில் கலந்து குடித்து வந்தால் குன்ம நோய் ( இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல், மண்ணீரல், கால்லீரல் சார்ந்தது ) நீங்கி உடல் வலிமை அடையும்.

03.   கழற்சிக்காய்ப் பொடி சிறிதளவு, வெள்ளை உள்ளி (வெங்காயம்), முருங்கைப் பட்டை, சுக்கு, வசம்பு ஆகியவற்றைத் தண்ணீரில் இட்டு, எட்டில் ஒன்றாக சுண்டக் காய்ச்சி, குடித்து வந்தால், குடல்வாதம், சூலை, குன்மம், முதலிய நோய்கள் போகும்.

04.   கொள்ளுக் குடி நீருடன் சுக்குத் தூளும், பெருங்காயமும் சேர்த்துப் பருகி வந்தால் குன்மம் குணமாகும்.

=========================================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,விடை(வைகாசி )21]

{04-06-2021}

==========================================================

குரல் கம்மல் (Voice Dip)

01.  இஞ்சியை தோலை நீக்கி ஒரு சிறு துண்டு எடுத்து வாயில் இட்டு மென்று தின்றால் குரல் கம்மல் நீங்கிவிடும். (1223)

02.  குன்றிமணி இலையை மென்று சாற்றை விழுங்குவதால் குரல் கம்மல் நீங்கும்.

=========================================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,விடை(வைகாசி )21]

{04-06-2021}

==========================================================

குட்டம் (தொழுநோய்) (Leprosy)

01.  அழிஞ்சல் (சிவப்பு அழிஞ்சல்) வேர்ப் பட்டையைத் தூள் செய்து கிராம்பு, சாதிக்காய், சாதிப்பத்திரி சம எடை சேர்த்து, பொடித்து அரை தேக்கரண்டி அளவுக்கு எடுத்து தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் தொழுநோய் குணமாகும்.(946)

02.  எருக்கு இலையும். வேர் பட்டையும் சம அளவில் உலர்த்திய பொடி 2-3 கிராம் பசு வெண்ணெயில் கலந்து நாளும் இரு வேளை 48-96 நாள் சாப்பிட குட்ட நோய் குணமாகும், யானைக்கால் வியாதியும் குணமாகும். உப்பில்லாமல் பத்தியம் இருத்தல் வேண்டும். புளி காரம் எதுவும் கூடாது. தயிர் பால் மோரில்தான் சாப்பிடவேண்டும். இப்பொடியை தேங்காய் எண்ணெயில் கலந்து புண்ணுக்குத் தடவ புண் குணமடையும்.

03.  கடுக்காய் வேர், பட்டை, இலை, பூ உலர்த்தி, இடித்து, சலித்து வைத்துக் கொண்டு காலை மாலை அரைத் தேக்கரண்டி எடுத்து பசும் பாலில் கலந்து அருந்தி வந்தால் தொழுநோய் குணமாகும்.(942)

04.  கோணிக் கிழங்கை காயவைத்து இடித்து, தூளாக்கிப் பாலுடன் சாப்பிட்டு வந்தால் குட்டநோய் குணமாகும்.(512) (1966)

05.  சாதிக்காய், சாதிப்பத்திரி, கிராம்பு, சிவப்பு அழிஞ்சல் தூள் ஆகியவை சம எடை எடுத்து பொடித்து கால் தேக்கரண்டி எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் தொழு நோய் குணமாகும்.(946)

06.  சிவனார் வேம்பு சமூலத்தை எடுத்து சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி, இடித்து, பொடி செய்து கற்கண்டும் பாலும் சேர்த்து அருந்தி வந்தால் குட்ட நோய் குணமாகும்.(1722)

07.  துத்தி விதைகளைப் பொடித்து சர்க்கரையுடன் கலந்து இருநூற்று ஐம்பது மி.கி. முதல் ஐநூறு மி.கி. அளவு உண்டு வந்தால் சரும நோய்கள் உடல் சூடு, தொழுநோய், கருமேகம், வெண்மேகம், மேக அனல் முதலியவை கட்டுப்படும்.

08.  துத்தி விதையைப் பொடித்து, சர்க்கரையுடன் கலந்து 2 கிராம் அளவு காலை மாலை உண்டு வர, கரும்புள்ளி, உட்சூடு, பெருநோய் நீங்கும்.

09.  நன்னாரி வேர் சூரணம் செய்து வெண்ணெயில் கலந்து காலை மாலை சாப்பிட்டு வந்தால் ஆரம்ப நிலை குட்ட நோய் குணமாகும். (622) (1462)

10.  புன்னையின் இலைகள் பூக்கள் மற்றும் பட்டையை நிழலில் உலர்த்தி அரைத்துச் சூரணம் (பொடி) செய்து தினம் ஒரு வேளை கொடுக்க மூட்டுவலி, சொறி, சிரங்கு குஷ்டம், மேகம் ஆகியவை குணமாகும்.

11.  புன்னை எண்ணெய் பூசி வர மகாவாத ரோகம், முன் இசிவு, பின் இசிவு, கிருமி ரணம், சொறி சிரங்கு, குட்டரோகப் புண்கள் தீரும்.  (1486)

12.  வேப்பம் பட்டை [ நூறுஆண்டு ஆன மரத்திலிருந்து எடுத்த்து ] உலர்த்திய சூரணத்தை ஏழு முறை கரிசலாங்கண்ணி சாற்றில் ஊறவைத்து உலர்த்திய பொடியை 5 கிராம் அளவு வெந்நீரில் சாப்பிட 48 - 144 நாளில் 18 வகை குட்டமும் குணமாகும். முதியார் கூந்தல்  கொடியை நீர் சேர்த்து இடித்து அடுப்பில் வைத்து காய்ச்சி  அரைபாகமாகச் சுருங்கியவுடன்   வடிகட்டி அத்துடன் நல்லெண்ணெய் கலந்து, மரமஞ்சள், கருஞ்சீரகம், அதிவிடயம்  ஆகியவற்றை தலா 10 கிராம் எடுத்து  பாலில் அரைத்து   அவற்றையும் எண்ணெயில் போட்டு மீண்டும் காய்ச்சி இறக்கி வடிகட்டி வைத்துக் கொண்டு, இந்தத் தைலத்தை உடல் முழுவதும் தடவிக் குளித்து வந்தால் தொழு நோய் கட்டுப் படும். ( 941)

13.  வேப்பம் பூவை இரண்டு தம்ளர் நீர் விட்டுக் காய்ச்சி வடிகட்டி குடித்து வந்தால் தொழுநோய் குணமாகும்.  (625)

14.  வேப்பமரத்தில் மிக முதிர்ந்த மரமாகப் பார்த்து, அதன் பட்டையை இடித்து அத்துடன் பூவரசம் பட்டைத் தூளைக் கலந்து 2 கிராம் எடுத்து சர்க்கரை சேர்த்துக் காலை மாலை சாப்பிட்டு வந்தால் தொழுநோய் குணமாகும்.  (1653)

15.  வேப்பம் பிசினைத் தண்ணீரில் கரைத்து நன்றாகக் கலந்து அருந்தி வந்தால் தொழு நோய் குணமாகும்.  (944) (1932) (2005)

=========================================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !